Search
Search

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதாக நாம் கேள்வி பட்டிருப்போம். உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள பெண்கள் கொலுசு அணிகிறார்கள்.

பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலில் தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு செல்கிறது. எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசு குதிகால் நரம்பு உரசிக் கொண்டே இருக்கும். இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகளை கட்டுப்படுத்துகிறது.

பெண்கள் கொலுசு அணிவதால், அவர்களின் இடுப்புப் பகுதியானது சம நிலைப் படுத்தப்பட்டு , எப்போதும் மெல்லிய இடையுடன் காணப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கு கொலுசு அணிவதால், அவர்கள் எந்த திசையில் செல்கிறார்கள் என்பதை, குழந்தைகள் நடக்கும் போது கொலுசின் ஓசையின் மூலம் பெரியவர்கள் கவனித்துக் கொள்வர்கள்,

கொலுசை நாம் வெள்ளியில் செய்து போட்டுக் கொள்வதினால், கொலுசில் உள்ள வெள்ளியானது நமது ஆயுளை விருத்தி செய்கிறது, உடலின் சூட்டை தனித்து குளிர்ச்சியாக மாற்றுகின்றது.

பெண்கள் காலில் அணியும் வெள்ளி கொலுசானது, நம் உடம்பில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் பாதிப்பை தடுத்து சருமத்தை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.

Leave a Reply

You May Also Like