“குறை சொல்லாம நம்மளே இறங்கி வேலை செய்யணும்”.. களமிறங்கிய Terminator!

ஆளு பாக்க சும்மா அர்னால்டு கணக்கா இருக்கியேப்பா, என்று நல்ல கட்டுமஸ்தான உடற்கட்டு உள்ளவர்களை பார்த்து நாம் சொன்னது உண்டு. அந்த அளவிற்கு இந்திய நடிகர் இல்லை என்றபோதும் அர்னால்டு என்று அழைக்கப்படும் Arnold Schwarzenegger மிகப்பிரபலம்.
இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவரை டெர்மினேட்டராக பார்த்தவர்கள் தான் அதிகம். நமது இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவிருந்த சில நாட்களுக்கு முன்பு தான் Thal என்ற இடத்தில் பிறந்தார். சிறுவயது முதலேயே body buildingல் ஆற்வம் கொண்ட இவர் இதுவரை 7 முறை Mr. Olympia பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் 1970களின் துவக்கத்தில் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர், சுமார் 53 ஆண்டுகளாக இன்றளவும் நடித்து வருகின்றார். அதுமட்டுமா, கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக பலமுறை பதவி வகித்த ஒரு சிறந்த அரசியல்வாதி.
இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் “நான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சாலையில் ஒரு பள்ளம் இருந்தது. நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் செலவும், மக்கள் பயன்படுத்தவும் சிரமமாக இருந்தது. பலர் குறை கூறினார்கள்”
“ஆனால் என்னை பொறுத்தவரை குறைகூறாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை தான் யோசிக்க வேண்டும். ஆகவே நானும் என் நண்பர்களும் இணைந்து அந்த சாலையை சரிசெய்துவிடும்” என்று கூறி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.