Search
Search

உங்களுக்கு கொலை மிரட்டலா?.. கேன்ஸ் நகரில் சன்னி லியோன் – மனம் நொந்து பேசியது என்ன?

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபல கேன்ஸ் நகரில் “கேன்ஸ் திரைப்பட விழா” மிகக் கோலாகலமாக நடந்து வருகிறது. பிரபல இயக்குனர்களில் விக்னேஷ் சிவன், பிரதீப் நங்கநாதன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் சன்னி லியோன் நடிப்பில் அனுராக் இயக்கிய கென்னடி திரைப்படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது. இந்நிலையில் அங்கு சென்றிருந்த சன்னி லியோன், தனது சினிமா வருகை குறித்து மனம் உருகி பேசினார்.

தொடக்க காலத்தில் அவர் ப்ளூ ஃபிலிம்களில் நடித்து வந்தது குறித்தும், அதன் பிறகு தான் தொலைக்காட்சி மற்றும் திரையுலகத்திற்கு வரும்பொழுது எதிர்கொண்ட எதிர்ப்புகளை பற்றியும் கூறினார். நான் இந்தியாவிற்கு வரவில்லை என்று எவ்வளவோ கூறியும் தன்னுடைய கணவர் டேனியல் தான் தன்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தார் என்றும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை பங்கேற்க வைத்ததும் அவர்தான் என்றும் கூறினார். அந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் நான் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்றேன், என் மீது அதுவரை இருந்த ஒரு பார்வை மாறி என்னையும் ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டனர் மக்கள் என்றார்.

அதன்பிறகு நான் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் பலமுறை எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. என்னை நடிக்க கூடாது என்று பலரும் மிரட்டி உள்ளனர், இருப்பினும் அதையெல்லாம் தாண்டி தற்பொழுது உங்கள் முன் ஒரு நல்ல நடிகையாக நிற்கின்றேன் என்று மனம் உருகி கூறியுள்ளார்.

You May Also Like