உயிர் பயத்தால் 8 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட இளைஞர்

ஒமைக்ரான் வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்க மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தலாமா என அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

today news in tamil

கிராமப்புற மக்கள் உயிர் பயத்தில் தடுப்பூசி போடாமல் தப்பித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இன்னொருபுறம் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயிர் பயத்தில் தில்லுமுல்லு செய்து 8 தடவை தடுப்பூசி போட்டுள்ளார். 9-வது தடவையாக தடுப்பூசி போட முயன்ற போது அவர் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.

Advertisement

கொரோனா தாக்காமல் இருக்க போலியான முகவரி, செல்போன் எண்கள் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து 8 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.

ஒரு டோஸ் தடுப்பூசி போடவே பலர் பயந்து வரும் நிலையில் ஒருவர் 8 தடவை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஆச்சிரியம் என்னவென்றால் 8 முறை தடுப்பூசி போட்ட பிறகும் அவருக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.