Search
Search

திருமண நிதியை பெறுவதற்காக தங்கையை திருமணம் செய்த இளைஞர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் மாநில அரசின் திருமண நிதியை பெறுவதற்காக தனது சொந்த தங்கையை திருமணம் செய்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திருமணம் முடிக்கும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உதவி தொகையாக வழங்கப்படுகிறது. இதேபோல உத்தர பிரதேச மாநிலத்திலும் திருமணம் செய்யும் ஒவ்வொரு தம்பதிக்கும் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி வங்கி கணக்கில் 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். மேலும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மாநில அரசின் திருமண நிதியை பெறுவதற்காக தனது சொந்த சகோதரியை திருமணம் செய்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பகுதி மக்கள் அடையாளம் காட்டியதை அடுத்து அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். மேலும்சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You May Also Like