பரபரப்பை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி.. உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

கேரளாவில் இருந்து சுமார் 32 ஆயிரம் பெண்களை இஸ்லாமியர்களாக மதம் மாற்றி, அவர்களை தீவிரவாத அமைப்பில் இணைத்ததாக கூறப்படும் செய்திகளை உள்ளடக்கிய ஒரு திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி என்ற படம்.
தொடக்கம் முதலிலேயே குறிப்பாக இந்த படத்தின் டிரைலர் வெளியான நாள் முதல் இந்த படத்திற்கான எதிர்ப்பு மாபெரும் அளவில் இருந்து வருகிறது. அதேபோல கங்கனா போன்ற சில நடிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர்.
மேற்கு வங்கத்தில் இந்த திரைப்படம் திரையிட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த தடையை ரத்து செய்து படம் வெளியிட அனுமதி அளித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தி கேரளா ஸ்டோரி படக்குழுவிற்கு தற்பொழுது ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படும் அனைத்து இடங்களிலும், “இது முற்றிலும் ஒரு கற்பனை கதை” என்றும் “மதம் மாறியவர்களின் எண்ணிக்கை தொடர்பாக கூறப்படும் செய்திகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை” என்பதையும் பொறுப்புத் துறப்பு வாசகத்தில் இணைத்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.