வாஸ்து சாஸ்திரத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சில பொருட்களை தானமாக கொடுத்தால் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் தானம் செய்யக்கூடாத முக்கியமான ஐந்து பொருட்கள் என்னென்ன என்பதை இதில் பாப்போம்.
பணம்
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பணத்தை யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது. இது லட்சுமி தேவியின் அருளை இழக்கச் செய்யும் என்றும், வீட்டில் வறுமை நிலை ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
ஊசி மற்றும் நூல்
ஊசி மற்றும் நூலை மாலையில் யாருக்கும் கொடுக்கக்கூடாது. இவை பொருளாதார நிலைமையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
பால்
பாலை மாலையில் யாருக்கும் தானமாக கொடுக்கக்கூடாது. இது லட்சுமி தேவியை கோபப்படுத்தும் என்றும், வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
தயிர்
தயிர் தானம் செய்வது மாலையில் நன்மை தராது. இது வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறைவதற்கு வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
துளசி செடி
துளசி செடியை மாலையில் தானமாக கொடுக்கக்கூடாது. இது வீட்டில் நிதி நெருக்கடி ஏற்படும் என்றும், லட்சுமி தேவியின் அருளை இழக்கச் செய்யும் என்றும் நம்பப்படுகிறது.