மீண்டும் திரையில் தோன்றுவாரா மின்னல் முரளி?. நாயகன் டோவினோ தாமஸ் விளக்கம்!

தென்னிந்திய திரை வரலாற்றில் மிக குறைந்த அளவில் தான் சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி OTT தலத்தில் வெளியாகி நல்ல பல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் தான் மின்னல் முரளி.
மலையாளத்தில் மிக நேர்த்தியாக பல படங்களை நடித்து வரும் டோவினோ தாமஸ் இந்த படத்தில் கதையின் நாயகனாகவும், சூப்பர் ஹீரோ மின்னல் முரளியாகவும் நடித்திருந்தார். குரு சோமசுந்தரம், ஹரி ஸ்ரீ அசோகன் போன்ற முன்னணி நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
பேசில் ஜோசப் என்பவர் இந்த படத்தை இயக்க, சோபியா பவுல் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தார். எதிர்பாராமல் உருவாகும் ஒரு மின்னலின் மூலம் சாமானியன் ஜெய்சனுக்கு சில அசாத்திய சக்திகள் கிடைக்கிறது.
அதை கொண்டு மின்னல் முரளியாக மாறி தன்னுடைய கிராமத்தை அவர் எப்படி பாதுகாக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாக தன்னுடைய சமீபத்திய நேர்காணல்களில் தெரிவித்துள்ளார் இந்த கதையின் நாயகன் தாமஸ்.
அதற்கான கதையை உருவாக்க ஆவணம் செய்து வருவதாகவும், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் அதிக சுவாரசியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக, அதை நேர்த்தியாக உருவாக்க நேரமெடுக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.