அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில் (திருநீரகம்)

ஊர் – திருநீரகம்
மாவட்டம்– காஞ்சிபுரம்.
மாநிலம்– தமிழ்நாடு
மூலவர் -திரு நீரகத்தான்.
தாயார் -நிலமங்கை வல்லி
தீர்த்தம் -அக்ரூர தீர்த்தம் .
சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி
திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு
பெருமாளின் 108 தேசங்களில் இது 48 வது திவ்ய தேசம். உலகளந்த பெருமாள் கோவிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்று மூன்று திவ்ய தேசங்கள். ஒரு கோயிலுக்குள்ளேயே நான்கு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இவ்வாறு வேறு எங்கும் காண முடியாததாக அமைந்துள்ளது.
இந்த திருநீரகம் முன் காலத்தில் எங்கிருந்து என இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இங்கு உற்சவரே மூலவராக அருள்பாலிக்கிறார். பிரளய காலத்தின் போது இந்த பூமி நீரால் சூழ, பெருமாள் அதன்மீது ஆலிலை கண்ணனாக மிதப்பவன்.
எனவே பெருமானை நீராகத்தான் என திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ஆணவம் நீங்க இத்தலம் சென்று வழிபாடு செய்யப்படுகிறது. இக்கோயிலின் எதிரில் ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் தன் கையில் சங்கு சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார்.
மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.