படம் வருவதற்கு முன்பே மாஸ் காட்டும் சூர்யாவின் ‘வாடிவாசல்’

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாரக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதில் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் வாடிவாசல் படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகம் என்றே சொல்லலாம்.
வெற்றிமாறன் படம் என்றாலே அனைத்து தரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்திருப்பார்கள். அந்த வகையில் வாடிவாசல் படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு வாடிவாசல் நடிக்கப்போவதாக கூறியுள்ளாராம். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானதுமே வாடிவாசல் படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் மிகப்பெரிய தொகை கைமாறி உள்ளது தமிழ் சினிமாவை பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
படம் வெளிவருவதற்கு முன்பே ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் விற்கப்பட்டது இதுவே முதல்முறை. சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் தயாரிக்க உள்ள நிலையில் பாலிவுட்டிலும் சூர்யா மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.