நெய் ஒரு பாரம்பரிய இந்திய உணவுப் பொருள் மற்றும் மருத்துவப் பொருள் ஆகும். இதன் நன்மைகள் மற்றும் சுவை காரணமாக இது இந்திய சமையலில் மற்றும் ஆயுர்வேதத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி உணவில் சிறிதளவு நெய் சேர்ப்பது ஆரோக்கியத்துக்கு நல்லது.
இந்த நெய்யை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து காபியில் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
வெறும் வயிற்றில் காபி குடிக்கும் போது சிலருக்கு வயிற்றில் அமில தன்மை ஏற்படும். எனவே காபியில் சிறிதளவு நெய் சேர்ப்பது அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில் நெய்யில் பியூட்ரிக் அமிலம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்இருப்பதால் அவை குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், அது நரம்பு திசு வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் பெரிதும் உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் ஹார்மோன்களின் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. காலையில் நெய் காபியுடன் கீட்டோ டயட் முறையை பின்பற்றினால் அது எடையை குறைக்க உதவும்.
எப்படி தயாரிப்பது?
வழக்கமான முறையில் காபி தயாரித்து, அதை ஒரு குவளையில் ஊற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 அல்லது 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கொண்டால் சுவையான நெய் காபி தயார்.