யூகி திரைவிமர்சனம்
கதிர், நட்டி நடராஜன், நரேன், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் யூகி. அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாள என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது.
பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் ஆனந்தி திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரை தேடும் முயற்சியில் ஒருபுறம் நரேன், கதிர் மற்றும் நட்டி என மூன்று பேரும் தேடி வருகின்றனர். இறுதியில் கயல் ஆனந்தி கிடைத்தாரா? அவருக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.

படத்தில் நரேன் தான் கதாநாயகனாக இருக்கிறார். அவரைச் சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. இடைவேளைக்குப் பின் தான் கதிருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் யூகி படத்தில் உள்ளது. மிகவும் சிக்கலான திரைக்கதை கொண்ட இந்த கதையை தனது முதல் படமாக எடுத்திருக்கும் இயக்குனருக்கு தனி பாராட்டுக்கள்.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளதால் சற்று குழப்பம் ஏற்படுகிறது. யார் குற்றவாளி என யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை நகர்கிறது. இருப்பினும் இன்னும் சற்று விளக்கமாக திரைக்கதையை கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கலாம்.
படத்தில் பாடல்கள் இல்லை. ரஞ்சின் ராஜ் பின்னணி இசை ஓகே. திரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு யூகி பெஸ்ட் சாய்ஸ்.
