“பெற்ற தாய்க்கு இதைவிட வேறென்ன வேண்டும்” – அறந்தாங்கி நிஷா வெளியிட்ட செம போஸ்ட்

அறந்தாங்கி நிஷா, இன்றைய தேதியில் இவருக்கு பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லை. ஆண்கள் மட்டுமே Stand Up Comedyயில் கலக்கி வந்த நேரத்தில், திறமைக்கு என்னப்பா பாலின பேதமென்று களமிறங்கி கலக்கியவர் இவர்.
தொலைக்காட்சி மட்டுமல்ல தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார் அவர், அவ்வப்போது பல பள்ளிகள் மட்டும் கல்லுரிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்லும் இவருக்கு தற்போது ஒரு இன்ப அதிர்ச்சி நடந்துள்ளது.
அதுகுறித்து நிஷா கூறியது பின்வருமாறு…
“இந்த வருடம் நிறைய பள்ளிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக போய்கிட்டே இருந்தேன், திடீர்னு ஒரு அழைப்பு அறந்தாங்கியில் என்னோட பொண்ணு படிக்கிற பள்ளியில Eurokids சிறப்பு அழைப்பாளரா நீங்க வரணும்னு கூப்பிட்டாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது.”
“நான் மட்டும் இல்ல என்னுடைய கணவரும் சிறப்பு அழைப்பாளரா அழைச்சிருந்தாங்க. இதுவரைக்கும் பள்ளியில நான் எந்த பரிசு வாங்கினதே கிடையாது. ஆனால் நிறைய பள்ளிகளுக்கு பரிசு கொடுப்பதற்கு இப்ப நான் போய்கிட்டு இருக்கேன், அந்த வகையில என் பொண்ணு என் கையால பரிசு வாங்கும் போது தனி சந்தோஷமாக இருந்தது”, என்று கூறியுள்ளார்.
உண்மையில் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சி பலருக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது, பலரும் நிஷாவின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.