பாலியல் தொல்லை கொடுத்த பாஜக அமைச்சர் : கோவாவில் பரபரப்பு

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் மிலிந்த் நாயக். இவர் அமைச்சர் தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்தியி பீகாரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அமைச்சருக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே நடந்த வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஸ்க்ரீன்ஷாட்களை கோவா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டார். மேலும் அமைச்சரும் அந்த பெண்ணும் போனில் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் மிலிந்த் நாயக் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். உண்மையிலேயே அதற்காகத்தான் ராஜினாமா செய்தாரா? அல்லது பெயர் வெளிவந்துவிட்டதால் ராஜினாமா செய்தாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.