நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் உணவுடன் சேர்த்து காபி அருந்துவது உடலுக்கு நன்மையா, தீமையா என்ற கேள்வி பலரையும் குழப்புகிறது. உண்மையில், காபி உடலில் ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவதில் சில நேரங்களில் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
காபியில் உள்ள ரசாயனங்கள் என்ன செய்கின்றன?
ஒரே கப் காபியிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன. இதில் முக்கியமானவை கேஃபின், பாலிஃபெனால், டானின் போன்றவை. இவை சில நேரங்களில் உடலில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் B வகை வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகளை சரியாக உறிஞ்சுவதில் தடையாக இருக்கலாம்.
யார் தவிர்க்க வேண்டும்?
- இரும்புச்சத்து குறைபாடுள்ளவர்கள்
- மாதவிடாய் உள்ள பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள்
- எலும்பு பலவீனமடைதல் அல்லது ஓஸ்டியோபோரோசிஸ் ஆபத்து உள்ளவர்கள்
இவர்கள் உணவுடன் காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். உணவுக்குப் பிறகு குறைந்தது 2 மணி நேரம் காத்திருந்து காபி குடிப்பது நல்லது.
காபி எவ்வாறு ஊட்டச்சத்துகளை பாதிக்கிறது?
- இரும்புச்சத்து: காபியில் உள்ள பாலிஃபெனால்கள் இரும்பு தன்மைகளை இணைத்துவிடுவதால், இரத்தத்தில் இரும்பு உறிஞ்சப்படாமல் கழிவாக வெளியேறுகிறது. இது தாவர மூலமான ‘non-heme’ இரும்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
- கால்சியம்: கேஃபின் சிறுநீரக செயல்பாட்டை அதிகரிப்பதால், உடலில் இருந்து அதிகமாக கழிவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
- B வைட்டமின்கள்: நீரில் கரையக்கூடியவை என்பதால், அதிகமாக காபி குடிக்கும்போது (நாள் ஒன்றுக்கு 4 கப்களுக்கு மேல்) அவை உடலில் சேமிக்கப்படாமல் வெளியில் வெளியேறும்.
ப்ரோபயோட்டிக் உணவுகள் மற்றும் காபி
யோகர்ட், கிம்சி போன்ற ப்ரோபயோட்டிக் உணவுகள் குடலில் நலமளிக்கும் பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகின்றன. ஆனால், இவைகளுடன் காபி போன்ற சூடான பானங்களை அருந்துவது அந்த பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, ப்ரோபயோட்டிக்கிற்குப் பிறகு 30–60 நிமிடங்கள் காத்திருந்து காபி குடிப்பது சிறந்தது.
தேநீர் ஒரு நல்ல மாற்றா?
தேநீரிலும் பாலிஃபெனால்கள் இருக்கின்றன. எனவே, அது கூட சில ஊட்டச்சத்துகளின் உறிஞ்சலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், தேநீர் அருந்தும் நேரத்திலும் கவனம் தேவை.
தினமும் ஒரு-இரண்டு கப்கள் காபி உடலுக்கு பாதிப்பளிக்காது. ஆனால், நீங்கள் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உணவுடன் காபி அருந்துவதை தவிர்த்து, தேவையான இடைவெளிக்குப் பிறகு தான் காபி குடிப்பது அறிவான தீர்வாகும்.