97 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்ட தனலட்சுமி வங்கி, திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்போது அந்த வங்கியில் Junior Officer மற்றும் Assistant Manager பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Junior Officer: ஏதாவதொரு பிரிவில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21-25 (31.3.2025 தேதியின்படி).
Assistant Manager: ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 21-28.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வழங்கப்படும்.
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.708 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்).
விண்ணப்பிக்கும் முறை: www.dhanbank.com/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 12.7.2025. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.