அட இது போதுமே.. கேப்டன் மில்லர் First Look மற்றும் டீசர் அப்டேட் வெளியானது – குஷியில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். நிவேதிதா சதீஷ், சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது இலங்கையின் விடுதலைப்புலிகளுடைய இயக்கத்தை சேர்ந்த கேப்டன் மில்லர் என்பவருடைய கதையா? அல்லது இது வேறு விதமான கதையா? என்பது இன்னும் ஒரு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கேப்டன் மில்லர் படத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த ஒரு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் சத்ய ஜோதி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலின் படி எதிர்வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும்.
மேலும் ஜூலை மாதம் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்பொழுது ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.