Search
Search

ஃப்ளிப்கார்ட்டில் ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு தீபாவளி சலுகை

பிக் தீபாவளி விற்பனை வருவதை முன்னிட்டு, ஹுவய் குழுமத்தின் முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்ஃபோன ஹானர் தனது பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனையை ஃபிளிப்கார்ட்டில் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்ஃபோன்கள் மீது அதிரடியாக விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஃப்ளிப்கார்ட்டில் 2018 நவம்பர் 1 முதல் 5 வரை பெறலாம்.

அறிவிப்பு குறித்து ஹுவய் நுகர்வோர் வணிகக் குழுமத்தின் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் பி சஞ்சீவ் கூறுகையில் ‘மற்றவர்களுக்குப் பரிசு கொடுக்கவும், மேம்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு மாற்றிக்
கொள்ளவும் இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை திருநாளாகும்.

பிக் தீபாவளி விற்பனைக்கு ஃபிளிப்கார்ட்டுடனான எங்களது கூட்டு முனைவு மூலம் அனைவரும் மகிழத்தக்க வகையில் ஹானர் ஸ்மார்ட்ஃபோன்கள் மீது கவர்ச்சிகரமான சலுகைகளையும், விலைக் குறைப்பையும் வழங்க உள்ளேம்.

வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் ஸ்மார்டான கருவிகளை வழங்குவதன் மூலம் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், ஹானர் குடும்பத்தில் அவர்களை இணைக்கத் தொடர் முனைவுகளை மேற்கொண்டு வருகிறோம்.

வாடிக்கையளர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிப்பதுடன் அவர்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்துகிறோம் என்றார். தீபவளியைக் கொண்டாடவும், மேம்படுத்தவும், ஹானர் தனது அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்ஃபோன்களைக் குறைந்த விலையில் ஃப்ளிப்கார்ட்டில் விற்க உள்ளது.

ஹனர் 9 என் (4+64ஜிபி) விலை ரூ.11999 மற்றும் ஹானர் 9 என் (3+32 ஜிபி) வேரியண்ட் விலை ரூ.9999 ஆகும். ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7எஸ் இரண்டுமே ரூ.1000 விலைக் குறைப்பில் கிடைக்கும். ஹானர் 9ஐ ரூ 2000 தள்ளுபடியிலும், ஹானர் 9 லைட் (3 +32 ஜிபி) ரூ.9999 பம்பர் விலையிலும், ஹானர் 9 லைட் (4+64 ஜிபி) ரூ.14999 விலையிலும், ஃப்ளாக்ஷிப் ஹானர் 10 ரூ.24999 &தள்ளுபடி விலையிலும் வாங்கி மகிழலாம்.

வாடிக்கையாளர்கள் இச்சலுகைகளை ஃப்ளிப்கார்ட் தீபாவளி விற்பனை 2018இல் பெறலாம். மேலும் எஸ்பிஐ க்ரெடிட் கார்ட் மூலம் வாங்குவோருக்கு 10% உடனடித் தள்ளுபடியும் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டில் ‘நோகாஸ்ட் இஎம்ஐ வாய்ப்புகளும்’ உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You May Also Like