நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, செரிமான மண்டலத்தில் உள்ள நல்ல செல்களை தவறாக தாக்கும்போது குடல் அழற்சி நோய் (IBD) ஏற்படுகிறது. இது ஒரு நீண்டகால நோயாகும். பொதுவாக 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது.
இந்த நோயின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்.
குடல் அழற்சி நோயின் முக்கிய காரணங்கள்:
நோய் எதிர்ப்பு அமைப்பின் மாற்றம்:
பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படவேண்டிய நோய் எதிர்ப்பு அமைப்பு, தவறாக செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செல்களை தாக்கும்போது இந்த நோய் ஏற்படுகிறது.
மரபியல் (Genetics):
குடும்பத்தில் ஏற்கனவே இந்த நோய் இருந்தால், பிறந்தவர்களுக்கு இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
புகைப்பிடித்தல்:
புகைப்பிடிப்பு இந்த நோயின் தீவிரத்தையும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடிய ஒரு முக்கிய காரணமாகும்.
தவறான உணவுமுறை:
பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக கொழுப்பு, நார்ச்சத்து குறைவான உணவுகள் மற்றும் எண்ணெய் உணவுகள் குடல் அழற்சி நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
சில பானங்கள்:
மதுபானங்கள், காஃபின் கலந்த பானங்கள் மற்றும் செயற்கை குளிர்பானங்கள் போன்றவை குடலுக்கு எதிர்வினை தரக்கூடியவை.
சில மருந்துகள்:
அழற்சி எதிர்ப்பு மருந்துகள், கருத்தடை மாத்திரைகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை சில நேரங்களில் குடல் அழற்சி நோயை தூண்டக்கூடும்.
குடலில் உள்ள நுண்ணுயிரிகள்:
நம் குடலில் வாழும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், வைரஸ்கள் போன்றவை நோய் எதிர்ப்பு அமைப்பால் தவறாக எதிர்வினைக்குப் பீடமாக மாறும்போது IBD ஏற்படுகிறது.
தொழில்மய வாழ்க்கை மற்றும் மன அழுத்தம்:
மிகுந்த வேகமான வாழ்க்கை, வேலை அழுத்தம் மற்றும் அமைதியற்ற வாழ்வு குடல் அழற்சி நோயை உருவாக்கும் காரணிகளாக இருக்கின்றன.
முக்கிய அறிகுறிகள்:
- தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி மற்றும் வீக்கம்
- ஆசனவாயில் எரிச்சல் அல்லது ரத்தம்
- எடை குறைதல்
- பசியின்மை
- உடல் சோர்வு
- வாயில் புண்கள்
- கண்களில் எரிச்சல்
- எலும்பு பலவீனம்
- ஊட்டச்சத்து குறைபாடு
இந்த நோயை எப்படி நிர்வகிக்கலாம்?
உணவுமுறை பராமரிப்பு:
- செரிமானத்திற்கு எளிய, குறைந்த நார்ச்சத்து உணவுகள் தேர்வு செய்யவும்
- சிறிய அளவில் அடிக்கடி உணவுண்ணும் பழக்கம் மேற்கொள்ளவும்
- அதிகமாக தண்ணீர் பருகவும்
- மது, காஃபின் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்கவும்
- பால் மற்றும் பால் பொருட்களை கட்டுப்படுத்தவும்
- அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிர்க்கவும்
மருத்துவ சிகிச்சை:
- அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வீக்கத்தை குறைக்கும்
- நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்தும் மருந்துகள்
- வைட்டமின் மற்றும் சப்பிளிமெண்ட்கள் – உணவால் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்கும்
மனநலம் பராமரிப்பு:
- தினசரி தியானம், யோகா மற்றும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகள்
- போதுமான தூக்கம்
- பொழுதுபோக்குகள் மற்றும் நலமளிக்கும் செயல்பாடுகள்
- மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்
குறிப்பு:
இது வாழ்நாள் முழுவதும் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு நோயாகும். எனவே, உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை சரியாகப் பின்பற்றுவது அவசியம். IBD நிலையாக இருந்துவிட்டால், பெருங்குடல் புற்றுநோயின் அபாயமும் அதிகரிக்கக்கூடும். அதனால், ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன் மருத்துவரை அணுகுவது நல்லது.