போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், ஸ்ரீகாந்த் வழக்கு குறித்து விளக்கம் அளித்தனர்.
ADVERTISEMENT
2023ஆம் ஆண்டு முதலே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருளைப் பயன்படுத்தி வந்ததும், மற்றவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.