இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலி ரயில் பயணிகளுக்கான அனைத்து ரயில் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த செயலியாகும்.
ரயில் ஒன் செயலியின் முக்கிய அம்சங்கள்:
முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத இரு வகை டிக்கெட்டுகளையும் எளிதாக வாங்கலாம்.
ரயிலின் நேரடி நிலை, பிளாட்ஃபார்ம் எண், PNR நிலை போன்றவை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
பயணத்தை திட்டமிட ‘Plan My Journey’ வசதி உள்ளது. ரயிலில் பயணிக்கும் போது உணவு ஆர்டர் செய்யும் வசதி. ரயில்வே தொடர்பான புகார்கள், உதவி கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக பதிவுசெய்து தீர்வு காணலாம்.
ரத்து செய்யப்பட்ட அல்லது தவறிய பயணங்களுக்கான பணம் திரும்ப பெறும் செயல்முறை எளிமையானது. IRCTC அல்லது UTS கணக்குகளை பயன்படுத்தி ஒரே கடவுச்சொல்லால் உள்நுழையலாம். பாதுகாப்பான மின்னணு பண பரிவர்த்தனைக்கு ரயில்வே டிஜிட்டல் வாலட் வசதி. இந்தியாவின் பல மொழிகளில் செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலி Android மற்றும் iOS இரு தளங்களிலும் கிடைக்கிறது. இதன் மூலம் பயணிகள் பல்வேறு ரயில்வே சேவைகளை தனித்தனியாக பல செயலிகள் பயன்படுத்தாமல் ஒரே செயலியில் பெற முடியும்.