உத்தர பிரதேசத்தில் ஜிதேந்திர் என்ற நபர் மின்சார துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பாம்புகளை பிடிக்கவும், அவற்றுடன் விளையாடவும் மிகவும் ஆர்வம் உள்ளவர்.
சமீபத்தில் இவர் கடும் விஷம் உள்ள பாம்பை தனது கழுத்தில் வைத்து அதனை முத்தமிட்டுள்ளார். அப்போது பாம்பு அவருடைய நாக்கை கடித்தது.
ADVERTISEMENT
இதையடுத்து ஜிதேந்திர் உடல் நிலை மோசமாகியது. கிராம மக்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர்.