Search
Search

இந்த நட்சத்திர ஜோடி யாருனு தெரியுதா மக்களே? ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்கள்

ஏவிஎம் ராஜன், உண்மையில் இந்த காலத்து இளைஞர்களுக்கு இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் இவர் தனது நடிப்பு பயணத்தை 1960களில் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் முடித்தவர் ராஜன், இவருடைய இயற்பெயர் சண்முகசுந்தரம். பெற்றோர் சண்முகசுந்தரத்தை போலீசாக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில் சினிமாவில் தனது ஆர்வத்தை செலுத்தினார் அவர்.

அதன் பிறகு சினிமாவில் நடிக்க பல வழிகளை தேடிய இவருக்கு முதல் முதலில் அமைந்த வாய்ப்புதான் 1959ம் ஆண்டு கே. சங்கர் அவருடைய இயக்கத்தில் வெளியான சிவகங்கை சீமை என்ற திரைப்படம். இந்த படம் தான் இவர் முதலில் நடித்த திரைப்படம் என்றபோதும் இந்த படத்தில் அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு இவர் நடித்து வெளியான முதல் திரைப்படம் ஆயிரம் காலத்து பயிர், இந்த திரைப்படம் வெளியான ஆண்டு 1963. அதன் பிறகு தொடர்ச்சியாக பல நூறு படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இறுதியாக 1987ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய நடிப்பில் வெளியான வீரன் வேலுதம்பி என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

அதன் பிறகு தற்பொழுது தனது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இவருடைய மனைவியின் பெயர் புஷ்பலதா. புஷ்பலதாவும் ஒரு முன்னணி நடிகை என்பது, சொல்லப்போனால் கணவருக்கு முன்பாகவே இவர் திரைத்துறையில் களம் இறங்கியவர்.

கோயம்புத்தூரை சேர்ந்த புஷ்பலதா, நல்ல தங்கை என்ற படத்தின் மூலம் 1955ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் இறுதியாக 1999ம் ஆண்டு ஜெய்சங்கர்நடிப்பில் வெளியான பூவாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்த ஜோடி பல ஆண்டுகாலமாக பொது வெளியில் வராத நிலையில் தற்போது அவர்களுடைய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

You May Also Like