மெட்டாவின் செயலியான WhatsApp-ல், அதன் Updates Tab-ல் விளம்பரங்கள் மற்றும் சந்தா விருப்பங்கள் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது மெட்டாவின் சேவைகளை பணம் சம்பாதிப்பதற்கான புதிய முயற்சி ஆகும். அதே சமயம், தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாப்பில் இருப்பதை வாட்சாப்ப் உறுதி செய்துள்ளது.
புதிய அம்சங்கள் என்ன?
- Status-ல் விளம்பரங்கள்: வணிகங்கள் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாட்சாப்பின் Status மூலம் நேரடியாக விளம்பரப்படுத்த முடியும். இதன் மூலம் பயனர்கள் புதிய சேவைகளை அறிந்து, உடனடியாக அந்த நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
- Channel சந்தாக்கள்: பயனர்கள் தங்கள் விருப்பமான Channels-க்கு மாதாந்திர கட்டணத்தை செலுத்தி, தனிப்பட்ட மற்றும் பிரத்யேக தகவல்களை பெறலாம்.
- பிரமோட் செய்யப்பட்ட Channels: வாட்சாப்ப் பயனர் ஆர்வங்களைப் பொருத்து Channels-ஐ பரிந்துரைக்கிறது. இதனால் நிறுவனர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க முடியும்.
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு
இந்த மாற்றங்கள் Updates Tab-ல் மட்டுமே தோன்றும். பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள், அழைப்புகள் மற்றும் குழுக்கள் முழுமையாக End-to-End பாதுகாக்கப்படுவதாக வாட்சாப்ப் தெரிவித்துள்ளது. தொலைபேசி எண்கள் விற்பனை செய்யப்படவோ பகிரப்படவோ மாட்டாது என்றும், தனிப்பட்ட செய்திகள் மற்றும் அழைப்புகள் விளம்பர நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
விளம்பர அனுபவத்தை தனிப்பயனாக்குதல்
வாட்சாப்ப் பயனர்களின் இடம், மொழி மற்றும் Channels உடன் தொடர்பு போன்ற குறைந்த அளவிலான தரவுகளை பயன்படுத்தி விளம்பர அனுபவத்தை தனிப்பயனாக்கும். மேலும், மெட்டாவின் Accounts Center-இல் இணைக்கப்பட்ட பயனர்களுக்கு, பல தள விளம்பர விருப்பங்களும் பொருந்தக்கூடும்.
இந்த புதிய மாற்றங்கள் வாட்சாப்பின் சேவை முறையில் ஒரு முக்கிய மாற்றமாகும். Updates Tab-ல் விளம்பரங்கள் மற்றும் சந்தா வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டாலும், தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாப்பில் இருப்பதால் பயனர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.