500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தான் ஏடிஎம்களில் கிடைக்கின்றன. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் இந்த ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. பல ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் வருகின்றன. இது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களின் சில்லறை பணப் பிரச்சினைகளை குறைக்க, ஏடிஎம்களில் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை அதிகமாக வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகளின் அதிக பயன்பாட்டால் ஏற்பட்ட சில்லறை பணப் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை அணுகுவதை அதிகரிக்கும் முயற்சியாக ரூ. 100 மற்றும் ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.