மோசமான சரிவை சந்தித்த நடிகர் சந்தானம்..!
காமெடி நடிகராக அறிமுகமாகிய சந்தானம், பிறகு ஹீரோவாக பல படங்களில் நடிக்க தொடங்கினர். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் குளு குளு.
இந்த படத்தை சன் தொலைக்காட்சி ரூ. 8.5 கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை வாங்கியது. ஆனால் இப்படம் படுதோல்வியடைந்ததால் சந்தானத்தின் மார்க்கெட் மோசமான சரிவை சந்தித்துள்ளதாம்.

இதன் காரணமாக அடுத்து வர உள்ள சந்தானத்தின் படங்களுக்கு சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை வாங்குவதற்கு எந்த ஒரு நிறுவனமும் முன் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
