ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சற்று கடினமாக இருக்கும். சனி வக்ரத்தால் வேலை, வியாபாரம் சற்று மந்தமாகலாம். அதிக செலவுகள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் நிதி ஆதாயத்தையும் அடையலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமான பலன்களைத் தரும். வேலை சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, மனை, வாகனம் போன்ற சொத்து வாங்கும் யோகம் உண்டு. இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு மங்களகரமாக இருக்கும்.
மிதுனம்:
மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணியிடத்தில் சற்று பணிச்சுமை இருக்கும். ஆரோக்கியத்தில் சில தொந்தரவு ஏற்படலாம். நீங்கள் செய்யும் வேலைகளுக்கு பலன்கள் தாமதமாக கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வேலையின் முன்னேற்றம் ஏற்படக்கூடிய மாதமாக இருக்கும். பணியிடத்தில் தெரியாத நபரின் உதவி கிடைக்கும். சில விஷயங்களால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்ப உறவில் மகிழ்ச்சி இருக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
சிம்மம்:
இந்த மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பல சவால்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் கவனமும், பொறுமையும் அவசியம். வியாபார சந்தையில் உங்கள் எதிரிகள் ஆதிக்கம் அதிகரிக்கும். அதனால் எச்சரிக்கையாக இருக்கவும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற விரும்புபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் பல மடங்கு லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சுப காரியங்களுக்காக செலவு செய்வீர்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சற்று ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டிய மாதமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கடன் வாங்குவது, கொடுப்பதைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சாதகமான பலன்களைத் தரும். மாதத்தின் தொடக்கத்தில் பணி அழுத்தம். சில குடும்ப பிரச்னைகள் சந்திக்க நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், வேலை தொடர்பான நல்ல பலன்களை பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சில மன அழுத்தத்தைத் தரக்கூடிய சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கலவையான பலனைத் தரும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். உங்களுக்கு வர வேண்டிய பணம் கிடைக்க தாமதமாகலாம். உங்களின் தைரியம் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலைகளைக் கடின உழைப்பால் எளிதில் சமாளிப்பீர்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக அமையும். வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முதலீடு செய்யும் முன் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நிதி நிலை மேம்படும்.