நீண்ட நேரம் அமர்ந்தே வேலை செய்பவரா? உடல் பருமனா? அதிக எடை தூக்கும் பணியில் இருக்கிறீர்களா? அல்லது சில வாரங்களாக முதுகின் கீழ் வலி இருந்தால் கவனிக்கத் தேவை இருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
முதுகெலும்பு பிரச்சனை இந்தியாவில் பரவலாக உள்ளது!
வல்லுநர்களின் கணிப்புப்படி, இந்தியாவில் சுமார் 60% பேர் முதுகுத்தண்டு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, Back Pain எனப்படும் கீழ் முதுகு வலி, 48% பேருக்கு உள்ளது. இந்த நிலை உலக அளவிலும் வேகமாக அதிகரிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2020இல் 61.9 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2050ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 84.3 கோடியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதுகெலும்பு பிரச்சனையின் முக்கிய காரணங்கள்:
- நீண்ட நேரம் நேராக அமராமல் வேலை செய்தல்
- உடல் பருமன்
- வயது முதிர்வு
- அதிக எடை தூக்குதல்
- அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பது
- உடல் இயக்கம் குறைவாக இருக்குதல்
புது தலைமுறை உடற்பயிற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவது நல்ல விஷயம் தான். ஆனால் எச்சரிக்கையின்றி அதிக எடையை தூக்கும் போது முதுகெலும்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்படும் பிரிவுகள்:
- அலுவலக பணியாளர்கள்
- IT துறையினர்
- கிராமப்புற பெண்கள்
- உடலுழைப்புத் தொழிலாளர்கள்
- வயதானவர்கள்
- பள்ளி செல்லும் குழந்தைகள் (மொபைல், டிவி பார்ப்பது காரணமாக)
முதுகெலும்பு பிரச்சனைகள்:
- கீழ் முதுகு வலி
- டிஸ்க்கு நகர்வு
- ஸ்பான்டிலிடிஸ்
- சியாட்டிகா
- ஆஸ்டியோபோரோசிஸ்
- ஸ்பைனல் ஸ்டெனோசிஸ்
- காயங்கள், முடக்குவாதம்
சிகிச்சை மற்றும் பராமரிப்பு:
முதலில் மருந்துகள், பிசியோதெரபி, உடற்பயிற்சிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 6-8 வாரங்களில் மாற்றம் தெரியவில்லையெனில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது ரோபோடிக் சர்ஜரி போன்ற நவீன முறைகள் மூலம் 80-95% வெற்றி காணப்படுகிறது.
தவிர்க்கக்கூடிய பழக்கங்கள்:
- நேராக நிமிர்ந்து உட்காருங்கள்
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை எழுந்து நடக்கவும்
- உடற்பயிற்சி செய்யவும்
- அதிக எடையை தூக்க வேண்டுமெனில் முதுகுக்கு அல்ல, கால்களுக்கு அழுத்தம் கொடுங்கள்
- உடல் பருமனை கட்டுப்படுத்துங்கள்
- புகைபிடிப்பதை தவிர்க்கவும்
- சூரிய ஒளியில் சிறிது நேரம் இருங்கள்
- D3 மற்றும் கால்சியம் போதுமான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்
அறிகுறிகள்:
- கீழ் முதுகு வலி
- கழுத்து மற்றும் முதுகில் கடினத்தன்மை
- உணர்விழப்பு அல்லது மரத்துபோதல்
- நடக்க சிரமம், சமநிலை இழப்பு
- நெகிழ்வுத்தன்மை குறைதல்
- நாள்பட்ட சோர்வு
முதுகெலும்பு என்பது நம்முடைய உடலின் அடித்தளம். இதைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கே! ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உடற்பயிற்சி மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் முதுகெலும்பு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.