ஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா..!

உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் போதும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும் காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடல் உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.

Advertisement

குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ஜீரண சக்தி அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

drinking water health benefits

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் குடல் நன்கு சுத்தமாகும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே உடலில் உள்ள கழிவுகளானது மலத்தின் மூலம் வெளியேறிவிடும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். மேலும் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி நல்ல பசி எடுக்கும்.

வெந்நீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும். அதுமட்டுமின்றி அல்சர் பிரச்சனை வராமல் தடுக்கும்.

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் மெட்டபாலிக் 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் நீங்கள் சாப்பிடும் உணவுகள் விரைவில் செரிமானமடைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் அதிகாலையில் தண்ணீர் குடித்து வரவேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து வெளியேறி உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.