Search
Search

ப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் 28 வயது இளைஞர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் குமார் நகார். இவர் போட்டி தேர்வுக்காக அவரது வீட்டில் இருந்து தயாராகிக் கொண்டு இருந்துள்ளார்.

ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்திருக்கிறார். நேற்று வழக்கம்போல் ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி பேசிக்கொண்டிருந்த போது ப்ளூடூத்தில் மின்சாரம் பாய்ந்து வெடித்தது. இதனால் ராகேஷ் குமாரின் காதுப்பகுதியில் பலத்த காயம் அடைந்தது.

மயங்கி கீழே விழுந்த அவரை அவரை சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

‘‘அவர் சிகிச்சையின்போது மரணம் அடைந்தார். சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம்’’ என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ராகேஷுக்கு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி வருபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like