செர்பியா செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.. ஏன்? – கேப்டன் மில்லர் தயாரிப்பாளர் விளக்கம்!

இலங்கையில் தங்களுடைய நாட்டிற்கான விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு மாபெரும் போராளி தான் கேப்டன் மில்லர். இவருடைய உண்மையான பெயர் வள்ளிபுரம் வசந்தன் என்பதுதான்.
ஏறத்தாழ இவருடைய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுதான் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் இருக்கப் போகிறது என்ற தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. மேலும் இந்த கதை உருவாகி வரும் வண்ணமும் இதையே சுட்டிக் காட்டுகிறது.
இது ஒரு ராணுவ கதைக்களம் உள்ள படம் என்பதால், இதற்கான உரிய அனுமதிகளை பெற கடினமாக இருப்பதாக இந்த படக்குழு அறிவித்துள்ளது. இந்திய ராணுவம் நிச்சயம் அனுமதி அளிக்கும் என்று நம்பிக்கை உள்ளதாகவும், தற்பொழுது செர்பியா நாடு வரை சென்று ஒரு போர் விமானத்தில் நடப்பது போன்ற சண்டை காட்சிகள் படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளர் சத்தியஜோதி நிறுவனத்தின் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு ஜூலை மாதத்தில் தனுஷ் தனது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்க செல்வார் என்றும் கூறப்படுகிறது.