தொப்பையை குறைக்க உதவும் சியா விதைகள்

சியா விதைகள் (Chia seeds in Tamil) அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் மிகப்பெரியது. சியா விதைகள் கலந்த நீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு 20g முதல் 40g அளவு சியா விதையை எடுத்துக் கொண்டால் ஹார்மோன் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலில் சேரும் அசுத்தங்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை சரி செய்யும். தொப்பையை குறைக்க விரும்புவோர் சியா விதைகளை சாப்பிட்டு வரலாம்.

சியா விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய நோய்களை வரவிடாமல் பாதுகாக்கும். மேலும் இது ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது.

சியா விதையில் alpha-linoleic acid என்கிற அமிலங்கள் உள்ளது. இது மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சியா விதையில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடண்ஸ் இருப்பதால் இது உடலின் செல்களுக்கு புத்துணர்வு அளித்து கிருமிகளை எதிர்த்து போராட வைக்கும்.

சியா விதைகளில் கால்சியம் அதிக அளவில் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலிமையை தரும். மூட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு சியா விதைகள் நல்ல பலனை தரும்.

Recent Post