Search
Search

“சென்னையில் மீண்டும் உருவெடுக்கும் தொல்லை”.. பிரபல பாடகி சின்மயி ட்வீட்!

சிலருடைய குரலில் பாடல்களை கேட்கும் பொழுது நம்மை மறந்து அந்த பாடலை ரசிக்கும் வண்ணம் ஒரு மந்திரத்தை செய்யக்கூடிய பல பாடகர்கள் தமிழ் திரையுலகில் உண்டு. அந்த வகையில் சுமார் 21 ஆண்டுகளாக தமிழ் துறையில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இன்றளவும் நம்மை மகிழ்வித்து வரும் ஒரு பாடகி தான் சின்மயி.

தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இவர் பல நூறு பாடல்களை பாடியுள்ளார். தமிழில் முதல் முறையாக ஏ.ஆர் ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் இவர் ஒரு பாடலை பாடினார்.

ஒரு தெய்வம் தந்த பூவே.. என்ற அந்த பாடலுக்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் அதிகம், இந்த 2023ம் ஆண்டில் சகுந்தலம், கொன்றால் பாவம், டக்கர் போன்ற படங்களில் இவர் பாடி உள்ளார். பாடல்களை பாடுவதோடு மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களையும் அப்பொழுது தனது சமூக வலைதளங்களில் கூறிவருகின்றார் சின்மயி.

இந்நிலையில் தற்போது சென்னையில் மீண்டும் உருவெடுத்துள்ள ஒரு புதிய பிரச்சினையை பற்றி அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சென்னையில் தற்பொழுது மீண்டும் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது என்றும். இதை தடுக்க என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

குழந்தைகள் இந்த கொசு கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். உரிய அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

You May Also Like