பால், காபியுடன் மாத்திரை சாப்பிடும் பழக்கத்தால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

நாம் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளுக்கும் ஒவ்வொரு குணங்கள் உள்ளது. சில மாத்திரைகள் உணவிற்கு முன்பு, உணவிற்குப் பின்பு என மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.

மாத்திரைகளை சரியான நேரத்தில் சரியான அளவில் சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு கேடு விளைவிக்கும்.

ஒரு சில பேர் மாத்திரை சாப்பிடும் போது வாயில் சிறிதளவு தண்ணீர் குடித்த பிறகு மாத்திரையை போடுவார்கள். இன்னும் ஒரு சில பேர் டீ, காபி, பால் என எது கிடைத்தாலும் அதில் மாத்திரையை போட்டு குடிப்பார்கள் இது மிகவும் தவறான செயல்.

பாலுடன் மாத்திரைகள்

பாலுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது அதில் இருக்கும் புரதம் மற்றும் கால்சியம் மாத்திரையில் உள்ள வீரியத்தை குறைத்து அதனை வேலை செய்ய விடாமல் தடுக்கும். இதனால் மருந்தில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சி கொள்ள முடியாமல் கழிவோடு சேர்ந்து மருந்தும் வெளியேறுகிறது.

குறிப்பாக ஆன்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது அதனை வேலை செய்ய விடாமல் தடுக்கும்.

காபியில் மாத்திரை

தலைவலிக்கு மாத்திரை சாப்பிடும் போது அதனை காபியில் கலந்து குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இதுவும் தவறான முறை தான்.

காபியில் உள்ள காபின் மாத்திரையில் இருக்கும் சத்துக்களை உடலுக்கு சேரவிடாமல் தடுத்து விடுகிறது. எனவே காபியில் மாத்திரை போடும் பழக்கத்தை விடுவது நல்லது. அதேபோல் மாத்திரையை சாப்பிட்ட பிறகும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் மாத்திரை

குளிர்ந்த நீரில் மாத்திரை சாப்பிடும்போது அந்த மாத்திரை செயல்படுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டர் குடித்தால் அது உணவில் உள்ள கொழுப்புகள் கரையாமல் அப்படியே தேங்கிவிடும். அதேபோல ஐஸ் வாட்டரில் மாத்திரை சாப்பிடும் போது மாத்திரையின் வேலை தாமதமாகும். எனவே குளிர்ந்த நீரில் மாத்திரை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

மாத்திரை சாப்பிடும் போது நீங்கள் வாய் நிறைய தண்ணீர் ஊற்றி அதில் மாத்திரையை போட்டு விழுங்குவது தான் சரியான முறை. மாத்திரையை விழுங்கிய பிறகு 250 மில்லி அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் மாத்திரை எந்த தடையும் இல்லாமல் நேராக உணவுக்குழாயில் செல்லும்.

Recent Post