யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்தது. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாகும். யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடிய உயிரினம். இவை மிகவும் வலிமையானவை. சிங்கம், புலி போன்ற விலங்குகள் நெருங்க முடியாத அளவுக்கு வலிமை கொண்டவை.

பொதுவாக யானைகள் எந்த விலங்குகளையும் வேட்டையாடுவதில்லை. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.

நோயுற்ற யானைகளுக்கு சக யானைகள் உணவையும் நீரையும் எடுத்து வந்து ஊட்டும். நோயுற்ற யானைகளை தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தும்.

உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளி குதிக்க முடியாது, யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

5 கிலோமீட்டர் தூரத்தில் தண்ணீர் இருந்தால் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறமை கொண்டவை.

யானையின் தும்பிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. ஒரு யானை ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை அருந்தும்.

யானைகளால் அறுபது கட்டளை வார்த்தைகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டது.

யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும்.யானைகள் 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். சிலநேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.

யானையின் துதிக்கை 40,000 தசைகளால் ஆனது.

இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆப்பிரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்குத் தந்தம் உண்டு.

பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது.

யானையின் இரண்டு தந்தங்களையும் சம அளவில் இருக்காது
.
கேரளா மாநிலத்தில் யானைகளுக்கு ஒரு மருத்துவமனை உள்ளது.

ஆப்பிரிக்காவில் வாழும் யானைகளின் காது ஆசியாவில் வாழும் யானையின் காதுகளை விட மூன்று மடங்கு பெரியது.

ஆசிய யானைகள் 11 அடி உயரம் கொண்டவை. ஆப்பிரிக்க யானைகள் 13 அடி உயரம் கொண்டவை.

யானையின் வேறு பெயர்கள்

யானைகளுக்கு தூய தமிழில் மொத்தம் 60 பெயர்கள் உள்ளது.

  1. யானை (கரியது)
  2. வேழம் (வெள்ளை யானை)
  3. களிறு
  4. களபம்
  5. மாதங்கம்
  6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
  7. உம்பர்
  8. உம்பல் (உயர்ந்தது)
  9. அஞ்சனாவதி
  10. அரசுவா
  11. அல்லியன்
  12. அறுபடை
  13. ஆம்பல்
  14. ஆனை
  15. இபம்
  16. இரதி
  17. குஞ்சரம்
  18. இருள்
  19. தும்பு
  20. வல்விலங்கு
  21. தூங்கல்
  22. தோல்
  23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
  24. எறும்பி
  25. பெருமா (பெரிய விலங்கு)
  26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது)
  27. பூட்கை (துளையுள்ள கையை உடையது)
  28. ஒருத்தல்
  29. ஓங்கல் (மலைபோன்றது)
  30. நாக
  31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
  32. கும்பி
  33. தும்பி
  34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
  35. கரேணு
  36. உவா (திரண்டது)
  37. கரி (கரியது)
  38. கள்வன் (கரியது)
  39. கயம்
  40. சிந்துரம்
  41. வயமா
  42. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
  43. தந்தி
  44. மதாவளம்
  45. தந்தாவளம்
  46. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
  47. வழுவை (உருண்டு திரண்டது)
  48. மந்தமா
  49. மருண்மா
  50. மதகயம்
  51. போதகம்
  52. விரமலி
  53. மதோற்கடம் (மதகயத்தின் பெயர்)
  54. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்) ஆகியவை ஆண்       யானைகளின்  பெயர்கள்.
  55. பிடி
  56. அதவை
  57. வடவை
  58. கரிணி
  59. அத்தினி
  60. துடியடி

Recent Post