Search
Search

“சகாப்தமாக வாழ்ந்த மாபெரும் நடிகர்” – கனத்த இதயத்துடன் கணவரை நினைவுகூரும் நடிகை ரோகினி

ரகுவரன்! தமிழ் சினிமா வரலாற்றில் யாரும் மறக்க முடியாத ஒரு பெயர் என்று தான் கூற வேண்டும். எம்ஜிஆர் அரசு கல்லூரியில் திரைப்படம் குறித்து படித்து முடித்தவர் ரகுவரன். கேரளாவில் பிறந்தவர் என்ற பொழுதும் சிறுவயதிலேயே கோயம்புத்தூரில் செட்டில் ஆனவர்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் 1982ம் ஆண்டு மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார், இவர் முதன் முதலில் தமிழில் நடித்த திரைப்படம் ஏழாவது மனிதன்(1982). 1986ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிஸ்டர் பாரத் திரைப்படம் தான் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த முதல் திரைப்படம்.

இவர்கள் இருவர் கூட்டணியில் ஒரு திரைப்படம் வெளியாகும் போது ஹீரோவாக ரஜினிகாந்த் அவர்களுக்கு என்ன வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு இணையான வரவேற்பு ஒரு வில்லனாக இவருக்கும் இருந்துள்ளது. 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா என்ற திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய சினிமா வரலாற்றில் இன்றளவும் ஒரு மயில்களாக நிற்கிறது.

அந்த படத்தில் பாஷா பாய்க்கு என்ன வரவேற்பு இருந்ததோ அதே வரவேற்பு மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரகுவரனுக்கு இருந்தது. தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கலக்கி வந்த அவர் இந்த கால தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து அநேக படங்களில் நடித்துள்ளார்.

தளபதி விஜய், தல அஜித் தொடங்கி நடிகர் தனுஷ் வரை பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். இவர் இறந்த பிறகு வெளியான அடடா என்ன அழகு என்ற திரைப்படம் தான் இவர் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம்.

இந்த மாபெரும் கலைஞர் நேற்று மார்ச் 19ம் தேதி 2008ம் ஆண்டு நம்மையும், தமிழ் சினிமாவையும் விட்டு பிரிந்தார். குடிப்பழக்கம் அதிக அளவில் இவருக்கு உண்டு என்பதை அனைவரும் அறிவர், அதனாலேயே உறுப்புகள் செயல் இழந்து இவர் மரணம் அடைந்தார்.

2009ம் ஆண்டு வெளியான கந்தசாமி திரைப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது ரகுவரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறப்பின் பிறகு ரகுவரனின் பகுதிகள் நீக்கப்பட்டு ஆஷிஷ் வித்யாதி நடித்திருந்தார்.

You May Also Like