Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

மணலிக்கீரையில் உள்ள மருத்துவ நன்மைகள்

மருத்துவ குறிப்புகள்

மணலிக்கீரையில் உள்ள மருத்துவ நன்மைகள்

மணலிக் கீரையானது பூண்டு இனத்தைச் சேர்ந்த ஒரு கீரையாகும். மணலி கீரையின் இலை, தண்டு, வேர் என அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்கள் பட்டியலிட்டுள்ள முக்கியமான மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் ஒன்று. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும் கீரை வகையாகும்.

மணலிக் கீரையின் மருத்துவ குணங்கள்

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். மணலிக்கீரையை காயவைத்து பின்பு பொடியாக்கி, தினமும் காலை, சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல், மன அழுத்தம், மனநலக் கோளாறுகள் குணமாகும்.

மணலிக்கீரையை பொறியல் செய்து சாப்பிட்டால் ஞாபக மறதி கோளாறுகள் ஏற்படாது. மேலும் இக்கீரையின் சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

இக்கீரையுடன், மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் சரியாகும்.

மணலிக்கீரையின் வேர், இலைகளை சேர்த்து அதன் சாறை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் குறையும்.

மணலிக் கீரையுடன் துளசி, வில்வம் இவை மூன்றையும் பொடியாக்கி, தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ஏற்படாது. சைனஸ் பிரச்சனையும் குணமாகும்.

மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

இது போன்று மருத்துவம், அனைத்து கீரைவகைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in மருத்துவ குறிப்புகள்

Advertisement
Advertisement
To Top