இரவில் சீரான தூக்கத்தை தரும் ஜாதிக்காய்

ஜாதிக்காய் மலேஷியாவில் பினாங்கிலும், நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் உற்பத்தியாகிறது.
ஜாதிக்காயை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் நாளடைவில் மறையும். மேலும் முகம் பொலிவாக காணப்படும்.
தேமல், படை போன்ற தோல் வியாதிகளுக்கு ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
அம்மை நோயின் போது ஜாதிக்காயுடன் சீரகம், சுக்கு பொடி செய்து, உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால், அம்மை நோயின் போது ஏற்பட்ட கொப்புளங்கள் மறையும்.
ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது.

ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சீரான தூக்கத்தையும் தரும்.
ஆண்களின் விந்து எண்ணிக்கை பிரச்சனைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள்.
வாய் அல்லது பற்களில் பிரச்சனை ஏற்பட்டால் அதை விரைவாக குணப்படுத்த ஜாதிக்காய் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.
இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும். இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும்தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய்.
குறிப்பு : ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.