12 ராசிகளுக்கான அக்டோபர் மாத ராசி பலன் 2021

மேஷம்
கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்ப வாழ்வில் அமைதி, ஒற்றுமை இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷிபம்
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். கடன் தொகை கிடைக்கப் பெறும்.
மிதுனம்
உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அரசு பணியில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நீடிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் அதிக பொறுப்புகள் வரும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். உடல் உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சிம்மம்
பண வரவு நன்றாக இருக்கும். அதே நேரத்தில் செலவுகளும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமாரான பலனே கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளை எடுப்பீர்கள். பழைய வாகனகங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. புதிய விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள்.
கன்னி
இந்த மாதம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களைக் காண்பார்கள். நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
துலாம்
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம்
இந்த மாதத்தில் பணத்தை கடனாக கொடுப்பதையும் வாங்குவதையும்தவிக்க வேண்டும். குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். சொந்தத் தொழில் நன்றாக இருக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தனுசு
இந்த மாதத்தில் புதிய முதலீடுகள் எதுவும் செய்யவேண்டாம். திருமணம் தடை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பணவரவு கணிசமாக அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பழைய முதலீடுகள் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள்.
மகரம்
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் நிலைமை படிப்படியாக சீராகும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
கும்பம்
இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மீனம்
உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். பொருளாதார நிலையில் சற்று இறக்கம் காணப்படும். வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப் பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.