Connect with us

Health Tips in Tamil, Tamil Health Tips

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2022

puthandu rasi palan 2022

ஆன்மிகம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2022

மேஷம்

2022ஆம் ஆண்டு குருபகவான் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையான பலன்கள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் சற்று நெருக்கடிகள் உண்டாகும்.

கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் ஆண்டின் தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்கள் பண விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறகு பணவரவுகளில் இருந்த தடைகள் நீங்கி தனவரவுகள் உண்டாகும். திருமண தடைகள் நீங்கி சிறப்பான வரன்கள் தேடி வரும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற முடியும்.

கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பணியிலிருந்த நெருக்கடிகள் குறைந்து ஊதிய உயர்வுகளும் கிடைக்கும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எதிர்பாராத பண உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆண்டின் தொடக்கத்தில் திருமண சுபகாரியங்களை மேற்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும்.

குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை செய்யும்போது கவனம் தேவை. பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் நல்ல அனுகூலங்கள் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும். வேலைப்பளு காரணமாக உடல் அசதி உருவாகும். பொருளாதார ரீதியாக இருந்த தடைகள் விலகி தனவரவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் நட்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்மராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உங்களின் தனித் திறமையால் முன்னேற்றம் அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நல்ல வாய்ப்புகள் பெற முடியும். உங்கள் முயற்சிகள் நல்ல பலனை தரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வருவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பணம் வரவால் சொத்துக்கள் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளியூர் மற்றும் வெளிநாடு மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் ஐந்தாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியாக முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பணியில் நிம்மதியான நிலை இருப்பதால் எல்லா பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு 7 ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். சொந்த வீடு, வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உருவாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் எதையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் தொழில் வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசியில் சனிபகவான் 4 ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.

வேலைப்பளு காரணமாக உடல் அசதி உருவாகும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமை மூலம் சமாளிப்பீர்கள். முடிந்த வரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றத்தை கொண்டு வரலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் படிப்படியாக நிவர்த்தியாகும்.

விருச்சகம்

விருச்சக ராசி காரர்களுக்கு 3 ஆம் வீட்டில் சனி வலுவாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிலும் துணிந்து செயல்படக்கூடிய ஆற்றல் உருவாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தி செய்வீர்கள். ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு தடைகளை எதிர்கொள்வீர்கள்.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். சுபகாரியங்கள் கைகூடும். தற்போது உள்ள குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக விலகி கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள். ஆன்மிக பயணங்கள் உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டாலும் நல்லபடியாக நடந்து முடியும். பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கலின் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.

பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு தடைகளுக்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும். பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு நல்ல வரவு கிடைக்கும். பெரிய முதலீடுகளை செய்யும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடைபெறுகிறது. எனவே நீங்கள் எதிலும் நிதானமாகச் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். இதனால் மனநிம்மதி குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அதிகப்படியாக கடன்கள் வாங்குவது தவிர்க்க வேண்டும்.

சொந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையை சமாளிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணியில் வேலை பளு சற்று அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிக்கனமாக இருப்பது, சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் முதல் மூன்று மாதங்களுக்கு சற்று சோதனைகள் இருந்தாலும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நல்ல பலன்களை அடைய முடியும். பொருளாதார நெருக்கடிகள் விலகி பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றில் சிந்தித்து செயல் படுவது நல்லது.

ஆடம்பர செலவுகளை குறைத்தால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பூர்விக சொத்துக்களை வாங்குவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு 11ல் சனி பகவான் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். சொந்த வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உள்ள எதிர்ப்புகள் விலகும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.

அதிக முதலீடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். சுப காரியங்கள் நடக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பது மூலம் பல நல்ல காரியங்கள் நடக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top