ராஜவம்சம் திரை விமர்சனம்
சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு, சதிஷ், தம்பி ராமையா, விஜயகுமார்,மனோ பாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சுந்தர் சி யின் உதவி இயக்குனர் கே.வி.கதிர்வேல் இப்படத்தை இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கிராமத்தில் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த சசிகுமார் சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கிறார். அதே கம்பெனியில் நிக்கி கல்ராணி வேலை பார்க்கிறார். அங்கு சசிகுமாருக்கு மிகப் பெரிய ப்ராஜக்ட் வழங்கப்படுகிறது.
இன்னொரு புறம் சசிகுமாருக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய குடும்பத்தினர் ஏற்பாடுகள் செய்கிறார்கள். திருமணமா, ப்ராஜக்டா என்ற நிலைக்கு சசிகுமார் தள்ளப்படுகிறார். இறுதியில் சசிகுமார் எடுத்த முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளை பற்றி இந்த படத்தில் சொல்ல முயற்சி செய்துள்ளனர். அதனை அழுத்தமாக சொல்லியிருந்தால் மனதில் இன்னும் ஆழமாக நின்றிருக்கும்.
சசிகுமார் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார். குடும்பம், காதல், நட்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியான நிக்கி கல்ராணி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகி பாபு, சிங்கம் புலி, சதீஷ் உள்ளிட்டோரின் காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
சாம்.சி.எஸ் பின்னணி இசையில் வழக்கம்போல் மிரட்டி இருக்கிறார். பாடல்கள் சுமார் ரகம்தான். ஒளிப்பதிவாளர் சித்தார்த் கிராமத்து அழகை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.
மொத்தத்தில் ராஜவம்சம் – குடும்ப சினிமா
