Search
Search

பண மோசடி புகார் : ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

admk news tamil

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது.

admk news tamil

ஆவின் உள்ளிட்ட அரசு பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரும் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தங்களுக்கு எதிராக புகார் அளித்த நல்லத்தம்பி மீது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக பல புகார்கள் உள்ளதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட பொய் புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி கணிசமானவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You May Also Like