ரசிகர்கள் எல்லாம் “பிரெஞ்சு குத்து” கேக்க ரெடியா? சந்தானம் இன் DD ரிட்டன்ஸ்!

சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் குலு குலு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் தான் DD ரிட்டர்ன்ஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீஸர் மற்றும் டைட்டில் வெளியானது, அதில் பலரால் அந்த பழைய கிளாசிக் சந்தனத்தை பார்க்கமுடிந்தது என்று தான் கூறவேண்டும். ஆகவே தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
தற்போது இந்த படத்தில் இருந்து பிரெஞ்சு குத்து என்ற பாடல் வெளியாகியுள்ளது, இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார். ஆர்.கே. என்டர்டைன்மெண்ட் தயாரிக்க இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் Afro.
தற்போது வெளியாகியுள்ள இந்த பிரெஞ்சு குத்து பாடலில் பிரபல நடன இயக்குநர் சாண்டி நமது சந்தனத்துடன் இணைந்து ஆடியுள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.