எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வராமல் தடுக்கும் எள்ளு விதைகள்

உணவிலும் மருத்துவத்திலும் எள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எள் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகையாகும். எள்ளின் மூலம் பெறப்படும் எண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது.

எள்ளில் காப்பர் சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து ஆகியவை உள்ளது.

எள்ளின் இலை, பூ, காய், விதை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. கருப்பு எள், வெள்ளை எள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை வெள்ளை நிற எள்ளில் இரும்புச்சத்தும் கருப்பு நிற எள்ளில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது.

தினசரி ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து அதனை நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்த நோயை சரி செய்யும்.

எள்ளு விதையை அரைத்து சொறி சிரங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் படிப்படியாக குறையும்.

கருப்பு நிற எள்ளு விதைகளில் பைட்டோஸ்ரால்கள் அதிகளவில் உள்ளது. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.

எள்ளு விதைகளில் பைட்டிக் அமிலம், மக்னீசியம் மற்றும் பைட்டோஸ்டெரால்கள் அதிகம் இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

எள்ளு விதைகளில் உள்ள ஜிங்க் சத்து எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம்.

Recent Post