Search
Search

கண் நோய்களைத் தடுக்கும் சிரசாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

sirsasana benefits in tamil

ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம்.

மூளையைச் செம்மைப்படுத்தி, அறிவாற்றலை அதிகரித்து, உடலுக்கும், முகத்திற்கும் தெளிவையும் வலுவையும், வசிகரத்தையும் தரும் ஆசனமாகும்.

சிரசாசனம் செய்முறை

தரைவிரிப்பில் குனிந்து தலையை சித்திரக் கம்பளத்தில் ஊன்றி கைகளை கோர்த்து வைத்துக் கொண்டு சுவாசத்தை உள்ளிழுத்துக் கொண்டு இரு கால்களையும் வயிற்றுடன் சேர்த்து மடக்கி வானோக்கி உயர்த்தவும். பக்கங்களில் சாய்ந்து விடாமல் கவனமுடன் இதைச் செய்ய வேண்டும்.

இப்போது தலை கம்பளத்திலும் உடல், கால்கள் வானோக்கியும் இருக்கும். இந்நிலை தான் சிரசாசனம் எனப்படும். அதே நிலையில் சுவாசத்தை இயல்பாய் உள்ளிழுத்து வெளியிட வேண்டும். பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். ஆரம்ப காலங்களில் சுவற்றில் சாய்ந்து சுவரை ஆதாரமாகக் கொண்டு செய்து பழகிய பின் ஆதாரம் ஏதுமின்றிச் செய்யலாம்.

Sirsasana Tamil

சிரசானத்தின் பலன்கள்

  • இரத்த ஒட்டத்தை சிராக்கும்
  • முக லாவண்யத்தை அதிகரிக்க செய்யும்
  • கண் நோய்களைத் தடுக்கும்
  • கண்களில் நீர் வடிதல், புரை படருதல் போன்றவற்றை போக்கும்.
  • தேகத்தை உன்னத நிலையில் வளர்ச்சியடையச் செய்யும்.

மேலும், அனைத்து யோகாசனங்கள் மற்றும் அதன் பலன்களையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

You May Also Like