சரும துளைகள் முகத்தில் வருவது இயல்பான விஷயம் தான். ஆனால், அந்த சரும துளைகள் வைத்திருப்பவர்கள் முகத்தை சரியாக பராமரிக்காவிட்டால், அதில் தூசி, பாக்டீரியாக்கள் படிந்து பெரிய விளைவை ஏற்படுத்தும். இந்நிலையில், சரும துளைகள் சரியாக என்னென்ன செய்ய வேண்டும் என்று சில டிப்ஸ்களை பார்ப்போம்.
தயிர்:
தயிர் என்பது எல்லோருடைய வீட்டிலும் கிடைக்கும் மிகவும் சாதாரண பொருள். இந்த உணவு பொருளில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. இதனை சரும துளைகளை நீக்கவும் பயன்படுத்தலாம். அதாவது, தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற உதவும் மேலும் சரும துளைகளை இருக்கமடைய செய்கிறது. இதனால் முகப்பருக்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
தக்காளி:
தனது மொத்த உடலில் 90 சதவீதத்தை தண்ணீரால் கொண்டது தக்காளி. இந்த காய்கறி இல்லாமல் தமிழகத்தில் உணவுப்பொருட்கள் செய்யவே முடியாது என்ற நிலை இருக்கிறது. அந்த அளவில் நாம் இதை பயன்படுத்துகிறோம். இதை வைத்தும் சரும துளைகளை நீக்க முடியும்.
தக்காளி, சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதை சரி செய்யும். சரும துளைகளை குறைக்கவும் உதவுகிறது. தக்காளியை மிக்சியில் அரைத்து அதன் சாறை முகத்தில் தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
ஆப்பிள் சிடெர் வினிகர்:
அரை கப் ஆப்பில் சிடெர் வினிகர் நான்கு டம்ளர் நீரில் கலந்து கொள்ளவும். அதை முகத்தில் தடவி மசாஜ் செய்துவரவும். தினமும் இவ்வாரு செய்தால் சரும அழகு அதிகரிப்பதை காணலாம்.