Search
Search

கதை கேட்ட தளபதி விஜய்.. இரு மொழிகளில் உருவாகும் படம்? – அந்த இயக்குநர் யார்?

தளபதி விஜய், இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தில் உள்ளவர். தமிழை தவிர வேறு மொழிப் படங்களில் இவர் நடித்ததில்லை (Cameo தவிர) என்றே கூறலாம். பிரபல இயக்குநரின் மகன் என்றபோது பல அவமானங்களை சந்தித்து இன்று உச்சம் தொட்டுள்ள ஒரு நடிகர்.

விஜயை பொறுத்தவரை கடந்த சில வருடங்களாக வேற்று மொழி இயக்குநர்கள் சொல்லும் கதையையும் கேட்டு நடித்து வருகின்றார். அவருக்கு கடைசியாக வெளியான வாரிசு படமும் வேற்று மொழி இயக்குநர் இயக்கிய படமென்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநரிடம் அவர் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் அல்ல, சில மாதங்களுக்கு முன்பு வெளியான வீர சிம்மா ரெட்டி என்ற ஹிட் படத்தை கொடுத்த கோபிசந்த் மலினேனி தான்.

தெலுங்கில் கடந்த சில வருடங்களாக நல்ல பல ஹிட் படங்களை கொடுத்துவரும் அவர், வம்சியை அடுத்து ஒரு சிறந்த கதையை விஜயிடம் கூறியுள்ளார். விஜய் அவர்களும் அந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டதாகவும், படம் தெலுங்கு மற்றும் தமிழ் என்று இரு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

You May Also Like