ஹைதராபாத், 14 ஜூன் 2025 – தெலங்கானா மாநில நிஜாமாபாத் மாவட்டம், ராமகூர் கிராமத்தை சேர்ந்த 75 வயது கங்காராம் மற்றும் 69 வயது மனைவி சோமம்மாள் ஆகிய வயதான தம்பதியினர் மீது மருமகள் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டது. போதன் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், வயதான தம்பதியர்கள் உடல் நலக்குறைவால் நீதிமன்ற வளாகத்தில் சிரமப்பட்டனர்.
இதனை கவனித்த நீதிபதி சாய் சிவா, நீதிமன்றத்துக்குள் வர முடியாத நிலையில் இருந்த கங்காராமை ஆட்டோவில் இருந்து நேரடியாக நீதிமன்றத்திற்கு வெளியே வந்து விசாரித்தார். அவரின் மனிதாபிமானமான இந்த செயல் தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
நீதிபதி விசாரணையின் முடிவில், வயதான தம்பதிகள் குற்றமற்றவர்கள் என்றும், மருமகள் போட்ட வழக்கு ஆதாரமற்றது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்த நிகழ்வு நீதிபதியின் உணர்வுப்பூர்வ அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது மற்றும் நீதிமன்றங்களில் மனிதநேயம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.