Search
Search

இன்றைய ராசி பலன்கள் 22-10-2022

daily rasi palan

மேஷம்
சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ஆன்மீகம் தொடர்பான பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மதிப்பு மேம்படும். மற்றவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.

ரிஷபம்
கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். செலவுகளை சிக்கனமாக செய்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வாகனங்கள் மீது ஈர்ப்பு உருவாகும். உங்களின் ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்
எதையும் செய்ய முடியும் என்கிற தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

கடகம்
கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாக்குறுதிகளை கொடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.

சிம்மம்
புதிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான பணிகளை திட்டமிட்டு செய்வீர்கள். பலரின் அறிமுகத்தை பெறுவீர்கள். குணத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.

கன்னி
வெளியூர் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்கள் மீதான மதிப்பு மேம்படும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து செய்வீர்கள்.

துலாம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவினை எடுப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் மதிப்பு உயரும். வீட்டின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாளாக அமையும்.

விருச்சிகம்
உத்தியோகத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு சார்ந்த பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்ற மொழி பேசும் மக்களிடம் ஆதரவு கிடைக்கும்.

தனுசு
கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்களின் மதிப்பு உயரும்.

மகரம்
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். ஒரு விதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். பணிச்சுமை அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்ட சில பணிகள் நடப்பதற்கு கால தாமதம் ஏற்படலாம்.

கும்பம்
பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சி உருவாகும். வியாபாரத்தில் புதிய சிந்தனை உருவாகும். பணியிடத்தில் உங்களின் திறமை வெளிப்படும்.

மீனம்
விடாப்படியாக செயல்பட்டு இழுப்பறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். குழந்தைகள் மூலம் மதிப்பு மேம்படும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம்.

You May Also Like