இன்றைய ராசி பலன் 22-07-2020 (புதன் கிழமை)

மேஷம்

உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி அதிக பலனை பெறலாம். உங்கள் பணியில் வளர்ச்சி காணப்படும். புதிய விஷயங்கள் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். குடும்ப உறவில் நல்ல மாற்றம் ஏற்படும். பணவரவு அதிகம் இருக்கும்.

ரிஷபம்

உங்கள் பணியில் உங்களுடைய திறமை வெளிப்படும். உங்களுடைய பணிக்கு பாராட்டுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் முயற்சிகளுக்கு பலன் தரும் நாள். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

மிதுனம்

உங்களுடைய வேலைகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனை சமாளிக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். பணவரவு இருந்தாலும் அதில் திருப்தி இருக்காது. குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தொண்டை சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். சக ஊழியர்களிடம் இருந்து சில சங்கடங்கள் உருவாகலாம். உங்கள் பணிகள் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

உங்களுடைய அணுகுமுறையில் கவனம் தேவை. வேலையில் சிறு தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனத்தோடு பணியாற்ற வேண்டும். விட்டுக் கொடுப்பதன் மூலம் குடும்ப உறவுகள் மேம்படும். பணவரவு மற்றும் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும்.

கன்னி

இன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களுடைய திறமையான பணியால் உயர் அதிகாரியிடம் இருந்து நல்ல பெயர் கிடைக்கும். பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

துலாம்

உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். உங்கள் பணியில் வெற்றியும் கூடுதல் பலன்களும் கிடைக்கும். பணத்தைப் பொறுத்தவரை புதிய முதலீடுகள் பயன்தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சவால்கள் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். மனதில் சிறு கவலைகள் தோன்றலாம். பணவரவு குறைவாகவே இருக்கும். அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

மனதில் ஏற்படும் குழப்பம் காரணமாக மகிழ்ச்சி குறைவாகவே காணப்படும். முடிவுகள் எடுக்கும் போது தெளிவாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். செலவுகள் அதிகமாக காணப்படும். பணவரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம்.

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மனதில் அமைதி நிலவும். உங்கள் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெற்றியும் மகிழ்ச்சியும் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதிகமான பணவரவு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறவு மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் தியானம் மற்றும் பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் ஏமாற்றத்தை காண்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். பணவரவு விஷயத்தில் அதிர்ஷ்டமும் குறைந்தே காணப்படும். மன உளைச்சல் காரணமாக சோர்வாக இருப்பீர்கள்.